பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு, உலகின் பல்வேறு நாடுகளில் அவரது திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படுகின்றன.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரும், உலகின் மிகப் பெரிய பணக்கார நடிகருமான ஷாருக் கான் வரும் நவம்பர் 2 ஆம் தேதி தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அவரது ரசிகர்கள் நடிகர் ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இத்துடன், ஷாருக் கான் திரைப்பட திருவிழா எனும் பெயரில், அவரது நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றி படங்கள் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மறுவெளியீடு செய்யப்படுகின்றன.
இந்த நிலையில், மத்திய கிழக்கு, ஐரோப்பா, நியூசிலாந்து, வட அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் ஷாருக் கானின் நடிப்பில் வெளியான தில் சே, தேவ்தாஸ், கபி ஹான் கபி நா, மெயின் ஹூன் நா, ஓம் சாந்தி ஓம், சென்னை எக்ஸ்பிரஸ் மற்றும் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்கள், நாளை (அக்.31) மறுவெளியீடு செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியான ஜிவி பிரகாஷ் குமாரின் பிளாக்மெயில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.