17 வயது சிறுவனின் காதல் கோரிக்கைக்கு சீரியல் நடிகை அளித்த பதில்!

நடிகை அவந்திகா மோகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கையும் அதற்கு நடிகை அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Avantika Mohan
அவந்திகா மோகன்படம் - இன்ஸ்டாகிராம்
Published on
Updated on
2 min read

நடிகை அவந்திகா மோகனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற சிறுவனின் கோரிக்கையும் அதற்கு நடிகை அளித்த பதிலும் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காதலிப்பதாகக் கூறி திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து சமூக வலைதளத்தில் கேள்வி கேட்டுவந்த 17 வயது சிறுவனுக்கு நடிகை அவந்திகா மோகன் பதில் அளித்துள்ளார்.

உலகம் என்னவென்று புரியத்தொடங்கியிருக்கும் இந்த வயதில், தேர்வில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், நாம் திருமணம் செய்துகொண்டால், கணவன் - மனைவி என்று அழைக்கமாட்டார்கள்; என்னை உன் அம்மா என்றே அழைப்பார்கள் என அச்சிறுவனுக்கு பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவந்திகா பதிவிட்டுள்ளதாவது,

''என் சிறுவயது ரசிகனுக்கு. நீ என்னை விட வயதில் சிறியவன். நீயும் சில நாட்களாக எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகிறாய். நேர்மையாக உன்னிடம் ஒன்று சொல்கிறேன். 16 அல்லது 17 வயது சிறுவன் நீ.

வாழ்க்கை என்னவென இப்போது தான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கும். நீ, என்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஓராண்டுக்கும் மேலாக மெசேஜ் அனுப்பி வருகிறாய்.

திருமணத்தைப் பற்றியல்ல; நீ தேர்வுகளைப் பற்றி கவலைப்பட வேண்டிய வயது இது. நாம் திருமணம் செய்துகொண்டால், நாம் திருமணம் செய்துகொண்டால், கணவன் - மனைவி என்று அழைக்கமாட்டார்கள்; என்னை உன் அம்மா என்றே அழைப்பார்கள்.

நடிகை அவந்திகாவின் பதிவு
நடிகை அவந்திகாவின் பதிவு

எனவே, நீ படிப்பில் கவனம் செலுத்து. சரியான நேரத்தில் காதல் உன்னை தேடிவரும். சரியான நேரத்தில் உன் காதல் கதை உனக்கு உனக்காக உருவாகும். அன்பும் ஆசிர்வாதங்களும்'' எனப் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

அவந்திகா
அவந்திகாஇன்ஸ்டாகிராம்

மலையாளத்தில் 2015 முதல் சின்ன திரை தொடர்களில் நடிகை அவந்திகா மோகன் நடித்து வருகிறார். முன்னதாக யக்ஷி ஃபெய்த்ஃபுல்லி யுவர்ஸ்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து குரொக்கடைல் லவ் ஸ்டோரி மற்றும் துல்கர் சல்மானுடன் ஒரு படம் என 5 படங்கள் வரை நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் கன்னடத்திலும் இரு படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்ன திரை தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிக்க | இரு நாயகிகள், ஒரு நாயகன் - பழைய கதையில் புதிய தொடர்!

Summary

Avantika Mohan responds to teens marriage proposal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com