
பிரபல மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி தனது கணவரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தொடக்கத்தில் கணவரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட கிரேஸ் ஆண்டனி தற்போது கணவரை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த கிரேஸ் ஆண்டனி (28 வயது) மலையாளத்தில் ஹேப்பி வெட்டிங் எனும் படத்தில் அறிமுகமானார்.
கிரேஸ் ஆண்டனியின் காதல் திருமணம்
ஃபகத் ஃபாசில் மனைவியாக கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். கடைசியாக இவர் பறந்து போ எனும் தமிழ்ப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார்.
இன்று (செப்.9) மாலை பெரிய கூட்டமில்லாமல் திருமணம் நடந்தததாக தனது இன்ஸ்டாவில் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
காதலித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்துள்ளதாக கிரேஸ் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
யார் இந்த அபி டாம் சிரியாக்?
தொடக்கத்தில் கணவரைக் குறிப்பிடாமல் பதிவிட்ட கிரேஸ் ஆண்டனி தற்போது கணவர் அபி டாம் சிரியாக்கை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
கேரளத்தைச் சேர்ந்த அபி டாம் சிரியாக் (36 வயது) இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது முதல் படமே தொழில்நுட்பக் கோளாறால் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. பின்னர் பிருத்விராஜின் பாவாட எனும் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கடைசியாக பத்மலோசனந்தே பவிழ மல்லிகா படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.