நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான லோகா திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
மலையாளத்தில் ஓணம் திருவிழாவையொட்டி திரைக்கு வந்துள்ள 'லோகா சேப்டர் - 1 சந்திரா' திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாது தமிழ், ஹந்தி ரசிகர்களிடமும் அசத்தலான வரவேற்பைப் பெற்றதால் பல திரைகளில் காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கல்யாணி பிரியதர்ஷனை மையக் கதாபாத்திரமாக வைத்து உருவான இப்படம் வெளியான ஓரே வாரத்திற்குள் ரூ. 100 கோடியை வசூலித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், தற்போது லோகா ரூ. 200 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளியான 10 நாள்களில் இந்த சாதனையைச் செய்துள்ளதால் இந்தியளவில் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. முக்கியமாக, மோகன்லாலின் எம்புரான் படத்தைத் தொடர்ந்து அதிவேகமாக ரூ.200 கோடி வசூலித்த மலையாளப் படமும் இதுதான்.
மேலும், லோகா கதைக்களத்துடன் தொடர்புடைய 4 பாகங்கள் உருவாகவுள்ளதால் இப்படத் தொடர் வணிக ரீதியாக பல சாதனைகளைச் செய்யலாம் என கருதப்படுகிறது.
இதையும் படிக்க: 26 ஆண்டுகளுக்குப் பின் வைரல்! யார் இந்த பாடகர் சத்யன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.