
சின்ன திரை நடிகை வைஷாலி தணிகா மற்றும் சத்ய தேவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தனக்கு குழந்தை பிறந்துள்ள செய்தியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைஷாலி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான கதகளி படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வைஷாலி தணிகா. இதனைத் தொடர்ந்து இவர் காதல் கசக்குதையா, சர்கார், சீமராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதனைத் தொடர்ந்து, ராஜா ராணி தொடர் மூலம் சின்ன திரையில் அறிமுகமான வைஷாலி தணிகா, பாண்டியன் ஸ்டோர்ஸ், நம்ம வீட்டு பொண்ணு உள்ளிட்ட தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
பின்னர், சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மகராசி தொடரில் நடித்தார். தொடர்ந்து, முத்தழகு தொடரில் எதிர்மறையான பாத்திரத்தில் தன்னுடைய அழுத்தமான நடிப்பை வழங்கி மக்கள் மனதைக் கவர்ந்தார்.
தொடர்ந்து, தனது கணவர் சத்ய தேவ் உடன் நடிகை வைஷாலி தணிகா மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்ன திரை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது, மகாநதி தொடரில் வெண்ணிலா பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை வைஷாலி தணிகா, தான் கருவுற்று இருப்பதாக முன்னதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வைஷாலி தணிகா - சத்ய தேவ் தம்பதிக்கு சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஓடிடியில் கூலி..! 4 மொழிகளில் ரிலீஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.