ஜனநாயகனுடன் மோதும் பராசக்தி!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “பராசக்தி”. நடிகர்கள் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்.
மொழிப்போர் காலங்களில் பழைய மெட்ராஸ் நகரத்தில் நடைபெறும் கதைகளத்துடன் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் பராசக்தி வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2026 ஆம் ஆண்டின் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, வரும் 2026 ஜனவரி 9 ஆம் தேதி, நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படம் எனக் கூறப்படும் “ஜனநாயகன்” திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, வெறும் நான்கு நாள்கள் இடைவெளியில் பராசக்தி வெளியாவது, இருபடங்களுக்கு இடையில் கடுமையான போட்டியை உருவாக்கியுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: சிம்பு 51: படப்பிடிப்பு தாமதம் ஏன்? இயக்குநர் விளக்கம்!
It has been announced that the film Parasakthi, starring actor Sivakarthikeyan, will be released in theaters on the occasion of the Pongal festival.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.