விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி இதுவரை 6 சீசன்கள் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிலையில், 7-வது சீசன் ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையிலும் இரவு 9.30 மணிக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியின் கடந்த 6 சீசன்களை தொகுத்து வழங்கிய ரக்ஷன், இந்த முறையும் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னோட்டக் காட்சியிலும் அவர் இருந்தார்.
கடைசி நேரத்தில் தொகுப்பாளர் ரக்ஷன் மாற்றப்பட்டு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த், தொகுத்து வழங்கி வருகிறார்.
தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் சூப்பர் சிங்கர், அது இது எது, உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
இவருடன் இணைந்து கடந்த முறை போட்டியாளராக இருந்த ஜோயாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோர் இம்முறையும் நடுவர்களாக பங்கேற்கிறார்கள். இவர்களுடன் நடிகை ரோஜா புதிய நடுவராக இணைந்துள்ளார்.
முந்தைய சீசன்களில் கோமாளிகளாக பங்கேற்ற புகழ், சுனிதா, ராமர், தங்கதுரை, டோலி, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முந்தைய சீசன்களில், குக்குகள் மற்றும் கோமாளிகள் மட்டும் பங்கேற்று வந்த நிலையில், இந்த சீசனில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சீசனில் போட்டியாளர்கள்(குக்குகள்) கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து தம்பதிகளாகப் பங்கேற்கிறார்கள். அதன்படி, பாடகர் மனோ - ஜமீலா, நடிகர் அரவிந்த் சேஜு - நடிகை சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, நடிகை சம்யுக்தா - அனிருத்தா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஜோடிகள் பங்கேற்றுள்ளனர்.
சமையல் நிகழ்ச்சியை நகைச்சுவையுடன் கலந்து ஒளிபரப்பு செய்யப்படுவதால் இந்நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு மாகாபா ஆனந்தின் வருகையால், நிகழ்ச்சியின் விறுவிறுப்பு கூடியுள்ளது.
The host of the show Cooku with Comali, currently airing on Vijay TV, has been replaced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குக் வித் கோமாளி - 7 நிகழ்ச்சியின் புதிய முயற்சி! போட்டியாளர்கள் யார் யார்?

குக் வித் கோமாளி - 7: ஒளிபரப்பு தேதி, நேரம் அறிவிப்பு!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி நடுவராக நடிகை ரோஜா!

விரைவில் குக் வித் கோமாளி - 7: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


