அய்யனார் துணை தொடரின் நாயகி மதுமிதா, கோடை காலத்தையொட்டி லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் முதல் பாகத்தில் நாயகியாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை மதுமிதா. இவர் தெலுங்கில் ஒருசில தொடர்கள் நடித்திருந்தாலும் எதிர்நீச்சல் தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
எதிர்நீச்சல் தொடர், டிஆர்பியில் முன்னணியில் இருந்ததுடன், இவரின் நடிப்புக்கும் எதிர்நீச்சல் தொடர் சிறப்பான அங்கீகாரம் கொடுத்தது.
எதிர்நீச்சலில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடரில் மதுமிதா நடித்து வருகிறார். அய்யனார் துணை தொடரும் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக மாறியுள்ளது.
ஓய்வு நேரங்களில் நண்பர்களுடன் சுற்றுலா செல்வதை வழக்கமாகக் கொண்ட மதுமிதா, அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வது வழக்கம். அந்தவகையில் தற்போது நடிகை மதுமிதா லண்டனுக்குச் சென்றுள்ளார்.

லண்டனில் மதுமிதா - இன்ஸ்டாகிராம்
அங்கு தான் தங்கியிருந்த அறை மற்றும் பார்வையிட்ட இடங்களில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மதுமிதா பகிர்ந்துள்ளார். விளம்பரம், தொடர் என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் ஓய்வு கிடைக்கும்போது அதனை முழுமையாக அனுபவிப்பதாக மதுமிதாவை பலர் புகழ்ந்து வருகின்றனர்.
Summary
Ayyanar thunai serial Actress Madhumitha heads to London for her summer vacation
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!

அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய நடிகர்கள்!

இளம் வயதில் புது வீடு கட்டி குடியேறிய சின்ன திரை நடிகை!

சின்ன மருமகள் தொடரில் முக்கிய நடிகை மாற்றம்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



