லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி படம் வெற்றிபெற்றுள்ள நிலையில், இதே கூட்டணி மேலும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமான படம் 'டிசி’. இப்படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர்கள் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் கடந்த வெள்ளியன்று (ஆகஸ்ட் 7) திரையரங்குகளில் வெளியானது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அனிருத் இசை இப்படத்தின் ஆல்பம் வெளியானபோதே பெரிதும் பேசப்பட்ட நிலையில், படத்தில் அவருடைய பங்களிப்பு ஆக்ஷன் காட்சிகளைகூட மிகவும் ரசிக்கக்கூடிய வகையில் மாற்றியுள்ளதாக விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.
நடிகராக லோகேஷ் கனகராஜுக்கு சிறப்பான திரைப்படமாக அமைந்துள்ள இப்படம், ஆக்ஷன் காட்சிகளை அழகியல் தன்மையுடன் படமாக்கிய இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு பாராட்டுகளையும் பெற்றுத் தந்துள்ளது.
மேலும், 4 நாள்களில் ரூ. 26 கோடி வரை இப்படம் வசூலித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, டிசி படத்தின் வெற்றிக் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல்லு அர்ஜூன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் தனது அடுத்தப் படத்தை இயக்கவிருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அதற்கான பணிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் 2027-ல் அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜ் - அனிருத் - சன் பிக்சர்ஸ் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.
Summary
With the DC film featuring Lokesh Kanagaraj proving to be a success, reports have emerged that the same team is set to collaborate on another movie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
லோகேஷ் கனகராஜ் நடித்த டிசி படத்தின் வசூல் நிலவரம்!

லோகேஷ் கனகராஜின் டிசி படத்தைப் பாராட்டிய சூர்யா!

அனிருத் சம்பவம்... வரவேற்பைப் பெறும் டிசி திரைப்படம்!
15 பாடல்களுடன் வெளியாகும் டிசி படத்தின் ஆல்பம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


