லோகேஷ் கனகராஜ் நடிக்கும் டிசி படத்தில் 15 பாடல்கள் அமைந்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நாயகனாக அறிமுகமாகும் புதிய திரைப்படம் ’டிசி’.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில், தேவதாஸ் என்கிற கதாபாத்திரத்தில் லோகேஷ் கனகராஜும், சந்திராவாக நடிகை வாமிகா கேபியும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா நடித்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது. இதனைத் தொடர்ந்து, டிசி படத்தின் பாடல்கள் ஜூலை 24 அன்று வெளியாகவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. பாடல் ஆல்பத்தில் மொத்தம் 15 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. பாடல்களின் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளனர்.
டிசி திரைப்படம் ஆகஸ்ட் 7 அன்று திரையரங்குகளில் வெளியாகின்றது.
Summary
DC movie album to be released with 15 songs!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








