தொகுப்பாளர் ரக்ஷன் நாயகனாக நடிக்கும் “மேரி கோல்ட்” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.
விஜய் டிவி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதன் மூலம் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் தொலைக்காட்சித் தொகுப்பாளர் ரக்ஷன்.
இவர், நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் வரவேற்புகளைப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து, மறக்குமா நெஞ்சம், வேட்டையன், இதயம் முரளி உள்ளிட்ட படங்களிலும் ரக்ஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ரக்ஷன் நாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு “மேரி கோல்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்புக்கான பூஜைகள் நடைபெற்றுள்ளதாகவும் படக்குழுவினர் இன்று (ஆக. 13) அறிவித்துள்ளனர். இப்படத்தில், நம்ரிதா நாயகியாக நடிக்கின்றார்.
அறிமுக இயக்குநர் பிரியன் ராஜேந்திரன் இயக்கும் இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபு, சுகன்யா, விவேக் பிரசன்னா, சிங்கம்புலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Summary
Filming for the movie "Mary gold," starring presenter Rakshan as the lead, has begun.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

துருவ் விக்ரம் படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன்!

யோகி பாபுவின் 'பொறு மனமே பொறு' பாடல்!

மொத ராத்திரி - வெளியீட்டுத் தேதியுடன் முதல் தோற்ற போஸ்டர்!

துல்கர் சல்மான் - பூஜா ஹெக்டே படத்தின் பெயர் அறிவிப்பு!
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day




