மிஸ்டர் மிடில் கிளாஸ் என்ற தெலுங்கு மொழி திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜி. நாகேஸ்வர ரெட்டி இயக்கத்தில் மேகா ஸ்ரீகாந்த், லயா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் மிடில் கிளாஸ். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
மேலும் இந்தப் படத்தில், ராஜேந்திர பிரசாத், ரகு பாபு, வெண்ணெலா கிஷோர், பிருத்விராஜ், சுனில், நாகேஸ்வர் ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம், ஒரு நடுத்தர வர்க்க மனிதனின் வாழ்க்கையில் நடக்கும் போராட்டங்களையும் குடும்ப உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும் மையப்படுத்தி, நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் திரைப்படத்துக்கு சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார். வெண்ணெலா கிஷோர், அலி மற்றும் சுனில் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகள் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
இந்த நிலையில், மிஸ்டர் மிடில் கிளாஸ் திரைப்படம் இன்று(ஆக. 19) ஆஹா ஓடிடியில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Summary
The Telugu film Mr Middle Class has been released on an OTT platform.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஓடிடியில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய டாப் 10 படங்கள்!

கட்டா குஸ்தி - 2! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 31 - ஆகஸ்ட் 6)

ஓடிடியில் வெளியான மதுபாலா - அபர்ணா பாலமுரளியின் புதிய படம்!

கான் சிட்டி! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஜூலை 24 - 30)
விடியோக்கள்

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK




