புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

அனுபமா பரமேஸ்வரன் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்: அதிதி ஷங்கர்

அனுபமா பரமேஸ்வரன் பேசிய விஷயங்களைப் பாராட்டிய அதிதி ஷங்கர்...

நடிகைகள் அதிதி ஷங்கர், அனுபமா பரமேஸ்வரன்

Published On :

நடிகை அதிதி ஷங்கர் நடிகை அனுபமா நேர்காணலைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான ஒன்ஸ் மோர் திரைப்படம் ஆக. 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இது, அதிதியின் 4-வது திரைப்படமாகும். இஷ்டத்துக்கு நடிக்காமல் நல்ல கதாபாத்திரங்களாகத் தேர்ந்தெடுத்து குறைவாக நடித்தாலும் போதும் என்கிறார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை அதிதி ஷங்கரிடம், ‘உறவுகளில் சுலபமாக பச்சைகொடி (green flag), சிவப்பு கொடி (red flag) என வகைப்படுத்தப்படுகிறார்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு அதிதி ஷங்கர், “அண்மையில் சக நடிகையொருவரின் பேச்சைக் கேட்டேன். அவர் சொன்னதில் பலருக்கும் மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், நான் தலை வணங்குகிறேன். அவர் பேசிய விஷயத்தை முக்கியமான விழிப்புணர்வாகவே பார்க்கிறேன். பல பெண்களும் ஆண்களும் இதே பிரச்னையை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், இது தங்களுக்குத்தான் நடக்கிறதா எனத் தெரியாமலும் உள்ளனர்.” என்றார்.

அதிதி ஷங்கர் அனுபமா பரமேஸ்வரனின் பேச்சைக் குறிப்பிட்டே தன் கருத்துகளைக் கூறியிருக்கிறார். சில நாள்களுக்கு முன் நேர்காணலில் பேசிய அனுபமா தன் முன்னாள் காதலரால் சந்தித்த துன்புறுத்தல்களைப் பகிர்ந்துகொண்டார்.

அதில், “நார்ஸிஸ்ட் காதல் வன்முறை குறித்து யாரும் பெரிதாக அறிவதில்லை. இது உளவியல் ரீதியாக நம்மைத் துன்புறுத்துவது. என் முன்னாள் காதலில் நடந்தது இதுதான். கடந்த 2 ஆண்டுகளாக நான் இதை அனுபவித்து வந்தேன். ஆனால், இது வன்முறைதான் என்பதை அறியவே நீண்ட காலம் ஆகிவிட்டது.

நினைத்துப் பாருங்கள், ஒருநாள் அவர் ரெமோ. அப்படியொரு காதல்... நாம் மிக கொடுத்த வைத்த ஆள் என்கிற அளவுக்கு கனவுகள் துளிர்க்கும். அடுத்த நாள், அந்நியனாகிவிடுவார்; மோசமான துன்புறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும். பின், அம்பியாக மாறி அழுது, கெஞ்சி நம்மை சமாதானப்படுத்துவார். நடிகை மடோனா செபாஸ்டியன் தன் நார்ஸிஸ்ட் காதல் அனுபவங்கள் குறித்து பேசிய போதுதான், நாமும் இப்படியான சூழ்நிலையில்தான் இருக்கிறோம் என்பதை நினைத்து நடுங்கினேன்.” எனக் கூறியது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியது. இதுகுறித்து, அதிதி ஷங்கர் பேசியதும் தற்போது கவனம் பெற்று வருகிறது.

Actress Aditi Shankar has spoken about an interview given by actress Anupama.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.