பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

10 கோடி மணிநேரம்! ரிசார்ட் இணையத் தொடர் புதிய சாதனை!

ரிசார்ட் இணையத் தொடர் புதிய சாதனை படைத்திருப்பது பற்றி...

resort

ரிசார்ட் இணையத் தொடர் - x

Published On :

ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் ரிசார்ட் இணையத் தொடர், 10 கோடி மணிநேரம் பார்வைகளைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

பிரவீன் பென்னட் இயக்கி வரும் ரிசார்ட் இணையத் தொடர் கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் 4 எபிசோடுகள் ஒளிபரப்பாகிறது.

முறையாக சமையல்கலை கல்வி கற்காத நாயகன், சிறந்த செஃப் ஆக வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் நாயகன் எதிர்கொள்ளும் சவால்கள், போராட்டங்களை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்படுகிறது.

'எருமை சாணி' புகழ் விஜய் குமார் எழுதி நாயகனாக நடித்து வருகிறார். இந்தத் தொடரின் எதிர்மறை பாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடிக்கிறார்.

விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்கள் மட்டுமின்றி, பலதரப்பட்ட மக்களும் இந்தத் தொடரை விரும்பிப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஹாட் ஸ்டாரின் நேரடி தயாரிப்பில் உருவாகி 10 கோடி மணிநேரம் பார்வைகளைக் கடந்த முதல் இணையத் தொடர் என்ற சாதனையை ரிசார்ட் படைத்துள்ளது.

10 கோடி மணிநேரத்தில் தமிழ் மொழியில் 53 சதவிகிதம் பேர் பார்த்துள்ளனர். ஹிந்தி 22%, தெலுங்கு 15%, மலையாளம் மற்றும் கன்னடம் தலா 10% பார்வை நேரங்களைப் பெற்றுள்ளதாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுவரை 92 எபிசோடுகள் வெளியாகியிருக்கும் நிலையில், அடுத்த வாரத்துடன் முதல் சீசன் நிறைவடையவுள்ளது. அடுத்த சீசன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

100 million hours : Resort web series sets a new record!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.