
தெலுங்கு சினிமாவில் முதல் வெற்றியைப் பெற்ற பிரியா பவானி சங்கர்!
பிரியா பவானி சங்கர் நடித்த இருமுடி வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது...

பிரியா பவானி சங்கர்
நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கில் தன் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தொகுப்பாளினியாகப் பணியாற்றி பின் சினிமாவுக்குள் வந்தவர். மேயாத மான், கடைக்குட்டி சிங்கம், பத்து துல, டிமான்டி காலனி - 2 ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். இடையே, சில தோல்விப்படங்களையும் கொடுத்தார்.
அதே நேரம், தெலுங்கிலும் கல்யாணம் கமனீயம், பீமா, ஜீப்ரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். ஆனால், அவை தோல்விப்படங்களாக மாறின.
இந்த நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா நிர்வாணா இயக்கிய திரைப்படம் இருமுடி கட்டு திரைப்படத்தில் நடிகர் ரவி தேஜாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார். தன் மகளைப் போன்றே பிற குழந்தைகளையும் நினைக்கும் நாயகன் பெண்களுக்கு எதிரான வன்முறையை எப்படி தட்டிக் கேட்கிறார் என்பதாக திரைப்படத்தின் கதை உருவாகியிருந்தது.

வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் பெரிய ஆதரவைப் பெற்று பிளாக்பஸ்டர் வெற்றியை நோக்கி நகர்ந்துள்ளது. ரவி தேஜாவுக்கு நீண்ட காலம் கழித்து வெற்றிப்படம் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது, பிரியா பவானி சங்கருக்கும் இப்படத்தின் மூலம் தெலுங்கில் முதல் வெற்றி கிடைத்துள்ளது.
Actress Priya Bhavani Shankar has registered her first success in Telugu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






