விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

நடிகர் பிருத்விராஜின் கலிஃபா திரைப்பட வசூல்!

கலிஃபா வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது...

Published On :23 ஆகஸ்ட் 2026, 3:01 pm IST

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கலிஃபா திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவான புதிய ஆக்சன் திரைப்படமான கலிஃபா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளிக்கிழமைத் திரையரங்குகளில் வெளியானது. டர்போ திரைப்படத்தை இயக்கிய வைசாக் இப்படத்தை இயக்க, ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு நாயகனுக்கும் கேங்ஸ்டருக்குமான கதையாக உருவான இப்படத்தின் டீசர், டிரைலர் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும், சிறப்பு தோற்றத்தில் நடிகர் மோகன்லாலும் நடித்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் இன்றைய வெளியீட்டைக் கண்டனர்.

ஆனால், கதையாக இப்படம் பழைய பாணியில் இருந்ததாகவும் ஆக்‌ஷன் காட்சிகளில் எந்தப் புதுமையும் இல்லை என்றும் பிருத்விராஜ் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். மேலும், இரண்டாம் பாதி சண்டைக் காட்சி நன்றாக இருந்ததாகவும் மோகன்லால் வருகை திரைக்கதை சொதப்பலால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் கூறுகின்றனர்.

Story image

இந்த நிலையில், இப்படம் இரண்டு நாளில் ரூ. 30 கோடியை வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிருத்விராஜ் நடிப்பில் இறுதியாக வெளியான விலாயத் புத்தா மற்றும் ஐ, நோபடி ஆகிய திரைப்படங்களின் வசூலை ஒப்பிட இப்படம் அதிகம் வசூலித்துள்ளது.

box office collection of the film Khalifa, starring actor Prithviraj, have been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.