FOLLOW US

ON GOOGLE DISCOVER

பிகினியுடன் ராக்கி கட்டுவது ஏன்? கீர்த்தி சனோனை விமர்சித்த கங்கனா ரணாவத்!

நடிகை கீர்த்தி சனோனின் விளம்பரத்தை எம்பி கங்கனா ரணாவத் விமர்சித்தது குறித்து...

Kriti Sanon, Kangana Ranaut.

கீர்த்தி சனோன், கங்கனா ரணாவத். - படங்கள்: இன்ஸ்டா / கீர்த்தி சனோன், கங்கனா ரணாவத்.

Published On :25 ஆகஸ்ட் 2026, 6:02 pm IST

பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தனது சகோதருருக்கு ராக்கி கட்டுவது போன்ற விளம்பரத்தினை நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் விமர்சித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகை கீர்த்தி சனோன் நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதில் அவர் பிகினி உடையுடன் சகோதரருக்கு ராக்கி கட்டுவது போல் நடித்துள்ளார். இது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி சனோன் கடைசியாக தனுஷுடன் தேரே இஷ்க் மெயின் படத்திலும் காக்டைல் 2 படத்திலும் நடித்திருந்தார்.

நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் கீர்த்தி சனோன் பெயரைக் குறிப்பிடாமல் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பெண்ணாக இருப்பதற்கு இது மிகவும் சிறந்த காலம். உலகப் பெண்ணாக மாறியுள்ள நாம் அணிவதற்கு இன்று காக்டைல் ஆடைகளில் இருந்து லெஹங்கா சோலிகள், ஜீன்ஸிருந்து புடவைகள், பிகினியில் இருந்து சல்வார் கமீஸ்கள் வரை ஏகப்பட்ட தேர்வுகள் இருக்கின்றன.

இவ்வளவு விதவிதமான ஆடைகள் இருந்தும் பிகினி/ உள்ளாடைகள் அணிந்து சகோதரருக்கு ராக்கி கட்டுவது ஏன்? உங்களது ஸ்டையில் செய்யும் பாணி எங்கே சென்றது? ஹா ஹா... இந்த விளம்பரம் வேண்டுமென்றே சஞ்சலத்தால் நடுக்கம் உண்டுபண்ணுகிறமாதிரி இருந்தது என்றார்.

சமூக வலைதளத்தில் பலரும் கீர்த்தி சனோனுக்கு ஆதரவளிக்கையில் சிலர் கங்கனா ரணாவத் கூறியதற்கும் ஆதரவாக பேசி வருகிறார்கள்.

Summary

Why would you tie your brother a rakhi in your bikini? Kangana Ranaut on Kriti Sanon ad

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.