மின் கட்டணம், விலைவாசியைப் பார்த்துவிட்டு வாக்களியுங்கள்: தாராபுரம், மதுராந்தகம் மக்களுக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் ஜந்தர் மந்தர் போராட்டத்தில் காவலர்களால் பாலியல் சீண்டல்; 3 பெண் பத்திரிகையாளர்கள் புகார்!ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைப்பிடிப்பு! வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு - காங்கிரஸ்மூலனூர் வஞ்சியம்மன் கோயிலில் முதல்வர் விஜய் இன்று சாமி தரிசனம்?இந்திய விமானி ஸ்மித் மச்சாருடன் இஸ்ரேல் பிரதமர் உரையாடல்! உலக நாயகன் என புகழாரம்!தாராபுரம் பிரசாரம்: உதயநிதி மீது வழக்குப் பதிவு!தமிழ்நாட்டின் கடலோரத்தில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவு ஏற்படலாம்! மதுராந்தகம், தாராபுரம் இடைத்தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு! கோவை, நீலகிரி, தேனியில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள்!

ராம் சரண் - உபாசனா தம்பதியினருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் பற்றி...

Ram Charan and upasana konidela

ராம் சரண், உபாசனா. - படம்: இன்ஸ்டா / ராம் சரண்.

Published On :

தெலுங்கில் பிரபல நடிகராக இருக்கும் ராம் சரண் - உப்சனா தம்பதியினருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக சிரஞ்சீவி தனது எக்ஸ் பதிவில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரணும் தொழிலதிபர் உபசனாவும் கடந்த 2012-இல் திருமணம் செய்தார்கள்.

இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.

இதன்பிறகு கடந்த அக்டோபரில் இரட்டைக் குழந்தகள் பிறக்கவிருப்பதாகக் கூறியிருந்தார்கள்.

இந்நிலையில், ஓர் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் பிறந்துள்ளதாக சிரஞ்சீவி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

ராம்சரண் புகழ்பெற்ற திரைப்பட நடிகர். ஆர்ஆர்ஆர், மகதீரா, ரங்கஸ்தலம் போன்ற படங்களில் நடித்து பெயர் பெற்றவர்.

ராம் சரணின் மனைவி உபாசனா ஒரு தொழில் அதிபர், கொடையாளர் மற்றும் சுகாதார சமூக ஆர்வலர், அப்பல்லோ மருத்துவமனைகளின் சிஎஸ்ஆர் பிரிவான அப்பல்லோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், குடும்ப சுகாதாரத் திட்ட காப்பீட்டு டிபிஏ லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

இவர் அப்பல்லோ மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தியாவார். இந்த மருத்துவமனை குழுமத்தின் மதிப்பு ரூ.77,000 கோடி என மதிப்பிடப்படுகிறது.

Summary

Ram Charan and upasana konidela have been blessed with twins says Chiranjeevi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.