திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

சின்ன மருமகள் தொடருக்காக சர்வதேச விருது பெற்ற நடிகர்!

சின்ன மருமகள் தொடரில் நடித்ததற்காக நடிகர் நவீன்குமாருக்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து...

News image

சின்ன மருமகள் தொடர் / விருது பெறும் நவீன்குமார் - படம் - இன்ஸ்டாகிராம்

Updated On :10 பிப்ரவரி 2026, 4:24 pm IST

சின்ன மருமகள் தொடரில் நடித்ததற்காக நடிகர் நவீன்குமாருக்கு சிறந்த நடிகருக்கான சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் தொடரில் நடித்ததற்காக மலேசியாவில், மக்கள் நாயகன் என்ற விருதைப் பெறும் முதல் சின்ன திரை நடிகர் என்ற பெருமையையும் இதன்மூலம் நவீன் பெற்றுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு சின்ன மருமகள் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

கிராமத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி, குடும்ப சூழல் காரணமாக பழமைவாத பணக்கார குடும்பத்தில் திருமணம் செய்துகொண்டு சென்ற பிறகு அவர் சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து சின்ன மருமகள் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

சின்ன மருமகள்

சின்ன மருமகள் - படம் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரில் நடிகை ஸ்வேதா நாயகியாகவும், அவருக்கு ஜோடியாக நவீன்குமார் நாயகனாகவும் நடித்து வருகின்றனர். இவர்களுடன் வி.ஆர். திலகம், பானுமதி, சங்கவி ராஜேந்திரன், ஸ்வேதா சுப்பிரமணியம் உள்ளிட்ட பலரின் நடிப்பும் இத்தொடருக்கு பலமாக அமைந்துள்ளது.

இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில் எடுக்கப்பட்டு வரும் இந்தத் தொடரில், நவீன் - ஸ்வேதாவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு காட்டில் எடுக்கப்பட்ட படப்பிடிப்புகள் பலரின் கவனத்தை ஈர்த்தன.

நவீன்குமார்

நவீன்குமார் - படம் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், சின்ன மருமகள் தொடரில் சிறந்த நடிப்பை வழங்கியதற்காக நடிகர் நவீன் குமாருக்கு மலேசியாவைச் சேர்ந்த தேசம் என்ற தொலைக்காட்சி நிறுவனம், சின்ன திரையின் மக்கள் நாயகன் என்ற விருதை வழங்கி கெளரவித்துள்ளது. நவின் குமாருக்கு சின்ன திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Actor Navin kumar won an international award for Chinna Marumgal serial

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.