வெளியீட்டுக்குத் தயாராகும் தனுஷ் 54!

நடிகர் தனுஷ் நடித்துள்ள அவரது 54-ஆவது திரைப்படம் குறித்து...
Dhanush, the editor in the film's editing process.
தனுஷ், படத் தொகுப்பு பணியில் எடிட்டர். படங்கள்: எக்ஸ் / தனுஷ் டிரெண்ட்ஸ்.
Updated on
1 min read

நடிகர் தனுஷின் 54ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய பணிகள் (போஸ்ட் புரடக்‌ஷன்) நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது எடிட்டிங் (படத் தொகுப்பு) பணிகள் தொடங்கியுள்ளன.

நடிகர் தனுஷ் இறுதியாக நடித்த தேரே இஷ்க் மே தமிழில் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஹிந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது.

தற்போது, போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

இந்தப் படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இயக்குநர் தனது இன்ஸ்டா பக்கத்தில் எடிட்டர் வேலை செய்யும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

போர்தொழில் படத்துக்கு எடிட்டராக இருந்த ஸ்ரீஜித் சரங் இந்தப் படத்துக்கு படத் தொகுப்பாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியாகுமென எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக அமரன் பட இயக்குநருடன் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Dhanush, the editor in the film's editing process.
தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் ஏன்? நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!
Summary

The post-production work for actor Dhanush's 54th film is currently underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com