தெலுங்குப் படத்துக்கு மட்டும் புரமோஷன் ஏன்? நயன்தாராவை விமர்சிக்கும் ரசிகர்கள்!

நடிகை நயன்தாராவின் தெலுங்குப் பட புரமோஷன் குறித்து...
Actress nayanthara with Director Anil Ravipudi
நடிகை நயன்தாரா, இயக்குநர் அனில் ரவிபுடி. படம்: யூடியூப் / ஷைன் ஸ்கிரீன்ஸ்.
Updated on
1 min read

நடிகை நயன்தாராவின் தெலுங்குப் பட புரமோஷன் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியுள்ளது.

நடிகர் சிரஞ்சீவியுடன் இணைந்து நயன்தாரா ‘ மன ஷங்கர வரபிரசாத காரு’ எனும் தெலுங்குப் படத்தில் நடித்துள்ளார்.

ஷைன் ஸ்கீரின்ஸ் அன்ட் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார்.

பொங்கலை முன்னிட்டு இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜன.12ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கான புரமோஷனில் நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.

தமிழில் புரமோஷன்களில் நடிக்காமல் இருக்கும் இவர் ஏன் தெலுங்குப் படங்களில் மட்டுமே நடிக்கிறார் என சிலரும் அது அவரது தனிப்பட்ட விருப்பமென சிலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

நடிகர் அஜித்தும் தனது படங்களின் புரமோஷனில் கலந்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Actress nayanthara with Director Anil Ravipudi
ரூ.100 கோடியை நோக்கி நிவின் பாலியின் சர்வம் மாயா!
Summary

Actress Nayanthara's Telugu film promotion has become a topic of discussion on social media.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com