

இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா, மூச்சுத்திணறல் காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் அவர், தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “தகுந்த மருத்துவ ஆதரவுடன், அவரது உடல்நிலை அளவீடுகள் (Vital parameters) சாதாரண நிலையில் உள்ளன. பாரதிராஜாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கு நல்ல முறையில் அவர் ஒத்துழைக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா அவர் உடல் நிலை தொடர்பாக வெளியாகும் செய்தி உண்மையல்ல என்பதற்காக தனியார் மருத்துவமனையில் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.