

மகாநதி தொடர் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம், இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி தொடர், கடந்த 2023 ஜனவரி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரை பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார்.
டிஆர்பியிலும் முன்னணியில் உள்ள இந்தத் தொடர், விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
இத்தொடரின் பிரதான பாத்திரத்தில் லஷ்மிபிரியா, சுவாமிநாதன், ருத்ரன் பிரவீன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்தொடரை இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் அதிகம் விரும்பிப் பார்க்கின்றனர்.
அதிலும், இத்தொடரில் நடிக்கும் விஜய் - காவேரிக்கு (லஷ்மிபிரியா - சுவாமிநாதன்) இணைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு சமூக ஊடங்களில் தனிப்பட்ட பக்கங்களை ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், மகாநதி தொடரின் கதையின்படி விஜய் - காவேரிக்கு நடைபெறும் வளைக்காப்பு நிகழ்ச்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலானதோடு, ரசிகர்களால் பலரால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.