

நடிகர் ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படத்துக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பொங்கல் வெற்றி ஜீவாவுக்குத்தான் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஜீவாவின் 45-ஆவது படமாக உருவான, ‘தலைவர் தம்பி தலைமையில்’ ப்டத்தினை இயக்குநர் நிதிஷ் சஹதேவ் இயக்கியுள்ளார்.
இதில், நாயகியாக பிரார்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் பொங்கல் வெளியீடாக நேற்று (ஜன.15) வெளியானது. இந்தப் படத்துக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் வெளியாகவில்லை. அதனால், பொங்கல் வெளியீட்டில் சிவகார்த்திகேயனுடன் கார்த்தி, ஜீவா படங்கள் களமிறங்கின.
பராசக்தி, வா வாத்தியார் படங்களை விட இந்தப் படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதால், சமூக வலைதளங்களில் பொங்கல் வெற்றி ஜீவாவுக்குத்தான் என தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
நீண்ட நாள்களுக்குப் பிறகு ஜீவாவுக்கு கம்பேக் படமாக இந்தப் படம் அமைந்துள்ளதாக சமூக வலைதளத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.