

நடிகை பூஜா ஹெக்டே தன்னிடம் தவறாக நடந்துகொண்ட பான் இந்திய ஹீரோவை அடித்ததாக செய்தி பரவி வருகிறது.
தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே தமிழில் பீஸ்ட், ரெட்ரோ ஆகிய திரைப்படங்களில் நடித்து அதிக கவனம் பெற்றார்.
இப்படங்கள் சரியான வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் இவற்றில் இடம்பெற்ற, ஹபீபீ மற்றும் கனிமா பாடல்களில் பூஜாவின் ஆட்டம் பலரையும் அசரடித்தது. குறிப்பாக, கூலியில் மோனிகா பாடலுக்கும் நடனமாடி அசத்தியிருந்தார்.
தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ள நடிகையென்பதால் தமிழ், தெலுங்கு மொழிகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார்.
இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே சொன்னதாக செய்தி ஒன்று வேகமாகப் பரவி வருகிறது. அதில், “சில ஆண்டுகளுக்கு முன் மிகப்பெரிய பான் இந்திய திரைப்படத்தில் நடித்தபோது அப்படத்தின் கதாநாயகன் என் அனுமதியில்லாமல் கேரவனுக்குள் நுழைந்து என்னைத் தொட முயன்றார். நான் அவரின் கன்னத்தில் அறைந்துவிட்டேன். அதன்பின், அந்த நடிகர் என்னுடன் பணியாற்று விரும்பவில்லை. சினிமா படப்பிடிப்பின்போது நடிகைகள் இப்படியான கேரவன் அத்துமீறல்களைச் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர்.” என பூஜா ஹெக்டே சொன்னதாகக் கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே குறிப்பிட்ட நடிகர் பிரபாஸ் என்றும் ராதே ஷ்யாம் படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்ததாகவும் பலரும் குறிப்பிட்டு வரும் வேளையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பூஜா ஹெக்டே என்ன சொல்ல போகிறார்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.