

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரின் ஒளிபரப்பு நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது.
பொதுவாகவே நெடுந்தொடருக்கு, இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி தவிக்கும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, தனி வரவேற்பு உண்டு.
மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் சிக்கியுள்ள, தமிழ்செல்வியின் கதையை சொல்லும், "சின்ன மருமகள்" தொடர், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்தத் தொடரில் மின்னலே சீரியலில் நாயகனாக நடித்து கவனம் பெற்ற நடிகர் ஷிவ சதீஷ் அண்மையில் இணைந்தார்.
மக்கள் மத்தியிலும் டிஆர்பியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் சின்ன மருமகள் தொடர், ஸ்வாரசியத்துடனும் விறுவிறுப்புடனும் ஒளிபரப்பாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 7.30 மணிக்கு சின்ன மருமகள் தொடர், ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், வரும் ஜன. 26 ஆம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் - 9 சீசன் ஆரம்பிக்கப்பட்டபோது, இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்ட சின்ன மருமகள் தொடர், மீண்டும் இரவு 9.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.