

ஜன நாயகன் திரைப்படத்தின் தீர்ப்பு தேதி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜன நாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் பெறாததால் அதற்கான வழக்கைச் சந்தித்து வருகிறது. படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டே தணிக்கை வாரியம் தங்களுக்கு வழங்க வேண்டிய சான்றிதழை வழங்காமல் செய்கின்றனர் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணைகளில் தணிக்கை வாரியம், படத்தை மறுஆய்வு செய்ய மேலும் 20 நாள்கள் கேட்டிருந்தது. அதனை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் தங்களின் வாதத்தை வைத்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் ஜன.27ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஒருவேளை, தீர்ப்பில் தணிக்கை வாரியத்தின் கோரிக்கையை ஏற்றால் பிப்ரவரியில் திரைப்படம் வெளியாகாது. அடுத்த மாதம் வெளியாகவில்லை என்றால் தேர்தல் காரணங்களால் மேலும் சிக்கலாகவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
அதேநேரம், தீர்ப்பு ஜன நாயகனுக்குச் சாதகமாக வந்தால் படத்தயாரிப்பு நிறுவனம் பிப்ரவரி முதல் வார வெளியீடாகத் திரைப்படத்தைத் திரைக்குக் கொண்டுவரும் முயற்சியில் இறங்குவார்கள். அதனால். ஜன. 27 ஆம் தேதி வழங்கப்படும் தீர்ப்புக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.