தமிழகத்தில் மங்காத்தா மறுவெளியீட்டு வசூல் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித் குமாரின் மங்காத்தா திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து பிரம்மாண்டமாக ஜன. 23 ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட திரைகளில் வெளியானது.
எதிர்பார்க்கப்பட்டதுபோல், தமிழகத்தின் பல பகுதிகளில் மங்காத்தாவின் வெளியீட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், இப்படம் இதுவரை ரூ. 15 கோடி வரை வசூலித்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், தமிழகத்தில் மட்டும் ரூ. 14 கோடியை வசூலித்திருக்கலாம்.
இப்படம் வெளியான திரைகளில் அஜித்தின் வசனங்களுக்கும் உடல்மொழிக்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததுடன் பாடல்களுக்கு நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த வார வெளியீட்டிலும் பெரிய திரைப்படங்கள் வெளியாகாததால் மங்காத்தா ரூ. 20 கோடி வரை வசூலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.