

நடிகர் அஜித் குமார் நாயகனாக நடித்த மங்காத்தா திரைப்படத்தின் மறுவெளியீட்டு முன்பதிவு துவங்கியுள்ளது.
நடிகர் அஜித் குமார், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “மங்காத்தா”.
அஜித்தின் 50-வது படமான இது அன்றே ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அஜித்தின் முதல் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
தற்போது, இப்படத்தை ஜன. 23 ஆம் தேதி மறுவெளியீடு செய்யவுள்ளனர்.
இந்த நிலையில், மங்காத்தாவுக்கான டிக்கெட் முன்பதிவுகள் துவங்கியுள்ளன. ஆன்லைன் விற்பனை ஆரம்பமான சில மணி நேரங்களிலேயே பல திரைகள் ஹவுஸ்ஃபுல் ஆகியுள்ளது அஜித் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.