பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்!

பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

News image

கமல் / ஜானகி / ரஜினி

Updated On :11 ஜூலை 2026, 9:37 pm IST

பாடகி ஜானகி மறைவுக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் திரையிசையில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடி ரசிகர்களிடம் நீங்காத இடத்தைப் பிடித்தவர் எஸ். ஜானகி (88). தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பஞ்சாபி, உருது உள்பட பல இந்திய மொழிகளில் பாடியவர்.

தமிழில் எம். எஸ். விஸ்வநாதன், இளையராஜா உள்பட ஏராளமான இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி மிகச்சிறந்த பாடல்களைப் பாடியுள்ளார் ஜானகி.

4 முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதை வென்ற ஜானகி, சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில், இன்று வயது மூப்பு காரணமாக ஜானகி உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தனது பதிவில், “தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்” எனப் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்ட இரங்கல் பதிவில், “பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

ரஜினி, கமல் இருவர் நடித்த படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்களை ஜானகி பாடியுள்ளார்.

Summary

Passing of singer Janaki: Actors Rajini and Kamal offer condolences!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.