பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

நடிகை ஸ்வாசிகாவுக்கு விருது கிடைக்கும்: இயக்குநர் சசி

நடிகை ஸ்வாசிகா குறித்து இயக்குநர் சசி பேசியது...

News image

நடிகை ஸ்வாசிகா

Updated On :6 ஜூன் 2026, 7:34 pm IST

இயக்குநர் சசி நூறு சாமி படத்திற்காக நடிகை ஸ்வாசிகாவுக்கு விருதுகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி இயக்குநர் சசி இயக்கத்தில் நூறு சாமி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூன் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் ஆண்டனியும் நடிகை ஸ்வாசிகாவும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தின் டீசர் காட்சிகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன.

இந்த நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இயக்குநர் சசி, “ஒரு நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அம்மா, மகன் பேசுவதைக் கேட்டு வியந்தேன். அந்த பாதிப்பிலிருந்துதான் இப்படத்தின் கரு உருவானது. நான் இயக்கிய பிச்சைக்காரன் திரைப்படம் அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தது. நூறு சாமி அம்மாவை மனுஷியாகப் பார்க்கிறது. அவர்களுக்கு உணர்வும் தனிப்பட்ட வாழ்க்கையும் இருக்கிறது என்பதை நாம் மறந்துவிடுகிறோம். அதனைப் பேசும் படமாக இது இருக்கும்.

இப்படத்தில் நடிகை ஸ்வாசிகா முக்கியமாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக அவருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். பிச்சைக்காரன் தெலுங்கிலும் பெரிய ஹிட் அடித்தது. நூறு சாமி தமிழ், தெலுங்கில் வெளியாகிறது. இது, சமூகத்தில் நல்ல தாக்கத்தையும் சில கேள்விகளையும் எழுப்பும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி பேசும்போது, “இப்படத்திற்காக நடிகை ஸ்வாசிகாவுக்கு தேசிய விருது கிடைக்கும்” என்றார்.

Director Sasi has stated that actress Swasika will receive awards for the film Nooru Saami.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.