நடிகர ஆர்யா நடிக்கவுள்ள சார்பட்டா - 2 படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கியுள்ள வேட்டுவம் திரைப்படத்தை, ஆகஸ்ட் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர். ஆக்சன் அறிவியல் புனைவு கதையாக இது உருவாகியுள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்பே, சார்பட்டா - 2 படத்தின் படப்பிடிப்பை நடத்த இரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான, செட் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் பாகத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் இதிலும் இணையவுள்ளனர்.
இந்த நிலையில், இரண்டாம் பாகம் முதல் பாகத்தின் காலகட்டத்திற்கு முன்னால் நடக்கும் கதையாக எழுதப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்பாகம் அவசரநிலை காலகட்டத்தைப் பதிவு செய்திருந்தது. இரண்டாம் பாகம், திராவிட கட்சிகளின் எழுச்சியைப் பதிவு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
New information has emerged regarding the film Sarpatta 2, starring actor Arya.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








