லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காதலரை அறிமுகப்படுத்திய நடிகை பிரிகிடா!

நடிகை பிரிகிடா காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்...

brigida saga with her lover.

தன் காதலருடன் நடிகை பிரிகிடா

Published On :30 ஜூன் 2026, 1:50 pm IST

நடிகை பிரிகிடா சாகா தன் காதலரைப் பிறந்த நாளில் அறிமுகம் செய்துள்ளார்.

ஆஹா கல்யாணம் என்கிற இணையத் தொடரில் பவி டீச்சராக நடித்து பிரபலமான நடிகை பிரிகிடா சாகா தொடர்ந்து அயோக்யா, மாஸ்டர் ஆகிய படங்களின் மூலம் வரவேற்பைப் பெற்றார். மேலும், இயக்குநர் பார்த்திபனின் உதவி இயக்குநராக இரவின் நிழல் படத்தில் பணியாற்றியதுடன் நடிக்கவும் செய்தார்.

இறுதியாக, மார்கன், இட்லி கடை ஆகிய படங்களில் நடித்திருந்தார். குணச்சித்திர கதாபாத்திரம், நாயகியின் தோழி ஆகிய ரோல்களில் நடித்தும் வருகிறார்.

இந்த நிலையில், பிரிகிடா சாகா நடிகர் ஆனந்த் என்பவரைக் காதலிப்பதாக அறிவித்துள்ளார். மீசைய முருக்கு, நண்பன் ஒருவன் வந்த பிறகு ஆகிய படங்களில் நடித்து கவனம் பெற்றவர் ஆனந்த். இவரும் பிரிகிடாவும் சில ஆண்டுகளாகக் காதலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

தற்போது, நடிகர் ஆனந்த்தின் பிறந்த நாளில், “சினிமா எனக்கு கனவுகளைக் கொடுத்தது. வாழ்க்கை உன்னைக் கொடுத்தது. என் என்றைக்குமானவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்” எனக் கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Actress Brigida Saga has introduced her boyfriend on her birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.