நடிகை சுனைனா திருமணம் செய்துகொள்ள இருந்த தன் காதலரைப் பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமான சுனைனா (35), மாசிலாமணி, திருத்தணி, நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானார். இறுதியாக், இவரின் நடிப்பில் ரெஜினா திரைப்படம் வெளியானது.
இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறாத நிலையில், அடுத்த படம் குறித்த எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்ததை குறிக்கும் வகையில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார்.

தகவலின்படி, துபையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி (40) என்பவரைத் திருமணம் செய்ய இருந்தார். அவரும் சுனைனா பதிவிட்டதைப் போன்று இரு கைகளில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படத்தை மட்டும் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில், நடிகை சுனைனாவும் யூடியூபர் காலித் அல் அமெரியும் அவரவர் சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை நீக்கியுள்ளனர். இதனால், இருவருக்கும் பிரிவு ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. அல் அமெரி ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
It is reported that actress Sunaina has parted ways with the boyfriend she was set to marry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதிய கார் வாங்கியதை வித்தியாசமாகக் கொண்டாடிய சீரியல் நடிகை!

பொருளாதார நெருக்கடி: ஒரு பகுதி தங்கத்தை ஆர்பிஐ விற்றிருக்கலாம்! ப்ளூம்பெர்க் அறிக்கை

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!








