பாலியல் துன்புறுத்து வழக்கில் இயக்குநர் சிதம்பரம் பிணை பெற்றுள்ளார்.
‘ஜான் ஈ மன்’ (jan.e.man) திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானர் சிதம்பரம். அப்படம், வெற்றிப் படமானதுடன் கதை ரீதியாகவும் கவனிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிதம்பரம் இயக்கத்தில் வெளியான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்படம் தென்னிந்தியளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது, சிதம்பரம் ’பாலன் தி பாய்’ என்கிற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை ஆவேஷம் இயக்குநர் ஜித்து மாதவன் எழுதியது.
சில நாள்களுக்கு முன் தெற்கு எர்ணாகுளம் காவல் நிலையத்தில் சிதம்பரம் மீது இளம்பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட பின், சிதம்பரம் மீது பாலியல் ரீதியாக பயன்படுத்தியது, அவமரியாதை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புகாரில் சினிமா துறையில் இருக்கும் அந்த இளம்பெண்ணை கடந்த 2022 ஆம் ஆண்டு சிதம்பரம் பாலியல் ரீதியாகப் தொந்தரவு செய்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், 4 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் வழக்கு தொடரப்பட்டுள்ளது என சிதம்பரம் தரப்பிலிருந்து கேள்வியெழுப்பி முன் ஜாமீன் கோரியிருந்தனர். தற்போது, எர்ணாகுளம் நீதிமன்றம் சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வடகிழக்கு பெண்களைத் தாக்கி பாலியல் துன்புறுத்தல்: காவல்துறை தீவிர விசாரணை
இலங்கையில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: மூத்த துறவி கைது!

பயிற்சிப் பணியாளா் மீது பாலியல் துன்புறுத்தல்: தனியாா் நிறுவன சிஇஓ மீது புகாா்

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைதானவரின் பிணை ரத்து
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

