ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 1,3365 கோடியைத் தாண்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே ரூ. 1,023 கோடி வசூலித்து அசத்தியுள்ளது. இதுவரை 5 திரைப்படங்கள் மட்டுமே இந்த சாதனையை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பி62 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ஆதித்யா தார் இயக்கத்தில் கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகள் வெளியாகி சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாகிஸ்தானில் நடக்கும் சம்பவங்கள், மும்பை குண்டுவெடிப்பு சம்பவம், தீவிரவாத நடவடிக்கைகளை மையப்படுத்தி உருவாகியிருந்த முதல் பாகம் ஹிந்தி மொழியில் மட்டும் வெளியாகி ரூ. 1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
இந்நிலையில், கடந்த மார்ச் 19ஆம் தேதி வெளியான துரந்தர் தி ரிவெஞ்ச் திரைப்படத்தின் வசூல் உலகம் முழுவதும் ரூ. 1,3365 கோடி வசூலித்துள்ளது. முதல் பாகத்தின் மொத்த வசூலை 11 நாள்களில் முறியடித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமே அதிகம் வசூலித்த திரைப்படங்கள்
1. பாகுபலி 2 - ரூ. 1,430 கோடி
2. புஷ்பா 2 - ரூ. 1,381 கோடி
3. துரந்தர் - ரூ. 1,056 கோடி
4. துரந்தர் தி ரிவெஞ்ச் - ரூ. 1,023 கோடி
5. கேஜிஎஃப் 2 - ரூ. 1,008 கோடி
உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த இந்திய திரைப்படமாக ஆமிர் கானின் தங்கல் ரூ.2,000 கோடி வசூலித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Summary
'Dhurandhar: The Revenge' Grosses ₹1,000 Crores in India Alone! Will It Break 'Baahubali 2's' Box Office Record?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜப்பான் மொழியில் வெளியாகும் துரந்தர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ரூ.1,500 கோடி வசூலைக் கடந்த துரந்தர் தி ரிவெஞ்ச்!

துரந்தரால் உயரும் ரன்வீர் மார்க்கெட்!

ரூ.1,088 கோடி வசூலித்து வரலாறு படைத்த துரந்தர் தி ரிவென்ஞ்ச்..! அதிகாரபூர்வ அறிவிப்பு!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



