இயக்குநர் வம்சி இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் விஜய்யை வைத்து வாரிசு திரைப்படத்தை இயக்கியவர் வம்சி பைடிபல்லி. படத்தின் பாடல்கள் நன்றாக இருந்தாலும் கதையாக கலவையான விமர்சனங்களைப் பெற்று எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தொடர்ந்து, வம்சி அடுத்த திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தைகளில் இருந்தார்.
இந்த நிலையில், நடிகர் சல்மான் கான் - வம்சி கூட்டணி புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாகவும் இதனை தில் ராஜூ தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சல்மான் கான் இறுதியாக நடித்த சிக்கந்தர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. சல்மான் கானே இத்தோல்விக்கு காரணம் என ஏ. ஆர். முருகதாஸ் கூறியிருந்தார். இதற்கு, சல்மான் தரப்பிலிருந்தும் முருகதாஸுக்கு பதிலடி கிடைத்தது.
தமிழ் இயக்குநர் படத்தில் தோல்வியைச் சந்தித்த சல்மான் கான், தெலுங்கு இயக்குநரிடமாவது ஹிட் கொடுப்பாரா என அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Summary
reports suggest actor salmaan khan act in telugu director vamsi paidipally
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகன் துல்கர் சல்மான் பிறந்த நாளுக்கு செல்லப் பெயருடன் வாழ்த்திய மம்மூட்டி!

மாணவர்கள் போராட்டம் துணிச்சலையும் வீரத்தையும் வெளிப்படுத்துகிறது! சிஜேபிக்கு சல்மான் கான் ஆதரவு!

குடும்ப கதையில் நடிக்கும் நடிகர் கென்?

கதாநாயகனாகும் ஜேசன் விஜய்! இயக்குநர் யார்?
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



