ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

படப்பிடிப்பின் நடுவே... சுற்றுலாவுக்குச் சென்ற எதிர்நீச்சல் குழு!

எதிர்நீச்சல் தொடரின் நடிகர், நடிகைகள் சுற்றுலா சென்றுள்ளது குறித்து...

Sun tvs Ethirneechal -2 Actress actors on vacation

எதிர்நீச்சல் குழு - இன்ஸ்டாகிராம்

Published On :

எதிர்நீச்சல் தொடரின் நடிகர், நடிகைகள் குழுவாகச் சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

சன் தொலைக்காட்சியில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் இரவு 10 மணிக்கு எதிர்நீச்சல் -2 (எதிர்நீச்சல் தொடர்கிறது) தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் குழு

எதிர்நீச்சல் குழு - இன்ஸ்டாகிராம்

இரண்டாவது பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர், நடிகைகளே நடித்து வருகின்றனர். இத்தொடரில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, ஸ்ரீஜா ஆகிய 4 பேர் முதன்மை பாத்திரங்களில் நடித்து வருகின்றனர். நடிகை கனிகாவுக்கு பதிலாக ஈஸ்வரி பாத்திரத்தில் தற்போது நடிகை ஸ்ரீஜா நடித்து வருகிறார்.

ஆணாதிக்கம் நிறைந்த வீட்டிற்குத் திருமணம் முடிந்து வந்த மருமகள்கள் எதிர்கொள்ளும் சவால்களும் பிரச்னைகளையுமே மையப்படுத்தி எதிர்நீச்சல் -2 எடுக்கப்பட்டு வருகிறது.

இத்தொடரின் டிஆரிபியை தக்கவைப்பதற்காகவும், ரசிகர்களை கவரும் வகையிலும் புதிய பாத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

எதிர்நீச்சல் நடிகர், நடிகைகள்

எதிர்நீச்சல் நடிகர், நடிகைகள் - இன்ஸ்டாகிராம்

இத்தொடரின் படப்பிடிப்பு கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே படப்பிடிப்பின் நடுவே நடிகர்கள் அனைவரும் குழுவாகச் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர்.

எதிர்நீச்சல் நடிகர், நடிகைகள்

எதிர்நீச்சல் நடிகர், நடிகைகள்

இதில் நடிகை பார்வதி, ஹரிபிரியா இசை, தேவதர்ஷினி, கமலேஷ் உள்பட குழுவினர் அனைவரும் சுற்றுலாவுக்குச் சென்றுள்ளனர். அங்கு குழுவாக நடனமாடி, விடியோ, புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.

இது தொடர்பான படங்களை நடிகை ஹரிபிரியா இசை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்புக்குச் சென்ற இடத்தில் கோடை சுற்றுலாவையும் முடித்துவிட்டதாக ரசிகர்கள் பலர் இதில் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Sun tvs Ethirneechal -2 Actress actors on vacation mode

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.