மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

News image

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! - சித்திரிப்பு / விஜய்

Updated On :21 மே 2026, 6:54 pm IST

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

1வாரண்ட்

Listicle image

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கும் புதிய இணையத் தொடர் ’வாரண்ட்’.

இந்த இணையத் தொடர் ஜீ 5 ஓடிடி தளத்தில் நாளை (மே 22) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2சிஸ்டம்

Listicle image

அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் நடிகைகள் ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா நடித்த சிஸ்டம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது.

வழக்குரைஞர்களான ஜோதிகா, சோனாக்‌ஷி சின்ஹா இருவரும் வெவ்வேறு வழக்குகள் மூலம் ஒன்றிணையும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

3மதுவிது

Listicle image

மலையாளத்தில் வெளியான நகைச்சுவை, ரொமான்டிக் திரைப்படம் மதுவிது. விஷ்ணு அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மதுவிது திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.

4பீஷ்மர்

Listicle image

தயான் ஸ்ரீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பீஷ்மர்.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.

5சதிலீலாவதி

Listicle image

தேவ் மோகன், லாவண்யா திரிபாதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு மொழி நகைச்சுவைத் திரைப்படம் சதிலீலாவதி.

இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

6கடந்த வார ஓடிடி (மிஸ்டர் எக்ஸ்)

Listicle image

இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் படத்தில் நடிகர்கள் ஆர்யா, சரத்குமார், மஞ்சு வாரியர், கெளதம் கார்த்திக், அனகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தத் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

7காளிதாஸ் - 2

Listicle image

நடிகர் பரத் நடிப்பில் வெளியான காளிதாஸ் - 2 திரைப்படம் ஆஹா ஓடிடியில் காணக் கிடைக்கிறது.

ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவான காளிதாஸ் - 2 படத்தில் கொலை வழக்கை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக பரத் நடிக்க, முக்கிய பாத்திரங்களில் அஜய் கார்த்திக், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

8’ஒரு துரோக சாஹச்சர்யத்தில்

Listicle image

ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவால் எழுதி இயக்கிய, மலையாள மொழிப்படம் ’ஒரு துரோக சாஹச்சர்யத்தில்’. இந்தப் படத்தில் குஞ்சாக்கோ போபன், திலீஷ் போத்தன், சஜின் கோபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

காமெடி, திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணலாம்.

9எக்ஸாம்

Listicle image

சற்குணம் இயக்கத்தில் துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் எக்ஸாம். இந்தத் தொடரில் அதிதி பாலன் மற்றும் அப்பாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தத் தொடரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.

10கொலைச்சேவல்

Listicle image

வி.ஆர். துதிவாணன் எழுதி, இயக்கியுள்ள கொலைச்சேவல் படத்தில், கலையரசன் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடித்திருக்கிறார்.

கொலைச்சேவல் திரைப்படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.

Summary

Let's take a look at which movies are releasing on OTT platforms this week.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.