ஒரே நாளில் 6 பாடல்களை உருவாக்கிய இளையராஜா!
மீண்டும் சாதனை செய்த இளையராஜா...

இசையமைப்பாளர்
இசையமைப்பாளர் இளையராஜா ஒரே நாளில் 6 பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.
எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் என தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து மாபெரும் வெற்றிப்படங்களைக் கொடுத்து பல உச்ச நட்சத்திர நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் நடிகர் ராமராஜன்.
இறுதியாக 2024-ல் சாமானியன் என்கிற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். ஆனால், இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
தற்போது, நடிகர் ராமராஜன் கடவுள் தந்த பரிசு என்கிற புதிய திரைப்படத்தில் நடிக்கிறார். இதனை அறிமுக இயக்குநர் காசிமாயன் என்பவர் இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். இது ராமராஜன் - இளையராஜா கூட்டணியின் 25-வது திரைப்படமாகும்.
இந்த நிலையில், இப்படத்திற்காக இளையராஜா ஒரே நாளில் 6 பாடல்களுக்கு இசையமைத்து முழுமையாக்கியுள்ளார். 50 ஆண்டுகால இசைத்துறையில் இளையராஜா ஏராளமான சாதனைகளைச் செய்திருக்கிறார். தற்போது, 83-வது வயதிலும் ஒரே நாளில் முழுத் திரைப்படத்திற்கான பாடல்களையும் உருவாக்கியுள்ளது பலரிடமும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிவை வெளியிட்ட நடிகர் ராமராஜன், “எனது "கடவுள் தந்த பரிசு" படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்தும் அடுத்த சில நாட்களிலேயே ரெக்கார்டிங்கையும் முடித்து சிறந்த பாடல்களை தந்திருக்கும் என் அண்ணன் "இசைக்கடவுளுக்கு" என் நெஞ்சம் மகிழ்ந்த நன்றி! அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டவன் நான்...” எனத் தெரிவித்துள்ளார்.
Music composer Ilaiyaraaja has composed music for 6 songs in a single day.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


