மறுவெளியீடாகும் ராமராஜனின் கரகாட்டக்காரன்!
கரகாட்டக்காரன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது...

நடிகர்கள் ராமராஜன், கனகா
நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவான கரகாட்டக்காரன் திரைப்படம் மறுவெளியீடாகவுள்ளது.
கங்கை அமரன் இயக்கத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கரகாட்டக்காரன். நடிகர்கள் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான இப்படம் இன்றும் தமிழின் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது.
கதையைக் கூறிய விதம், இசையமைப்பாளர் இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், ஒரு பழம் இங்க இருக்கு; இன்னொரு பழம் எங்க? என்கிற அந்த வாழைப்பழ காமெடி என வெளியாகி 37 ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த திரைப்படமாக இருக்கிறது.
இந்த நிலையில், கரகாட்டாக்காரன் நவீன டிஜிட்டல் முறையில் மெருகூட்டல் செய்யப்பட்டு டிடிஎஸ் ஒலி துல்லியத்துடன் மீண்டும் திரைக்கு வருகிறது. இதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் மறுவெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
The film Karakattakaran, starring actor Ramarajan, is set for a re-release.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

