மீண்டும் தமிழ்த் திரைப்படத்தில் ஷேன் நிகம்!
நடிகர் ஷேன் நிகமின் புதிய தமிழ்ப்படம்...

பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் புதிய தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார்.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ஷேன் நிகம் நாயகனாகவும் கவனம் பெற்று வருகிறார்.
தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார். அப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தொடர்ந்து, வெளியான பல்டியும் சரியான வரவேற்பைப் பெறவில்லை.
இந்த நிலையில், ஷேன் நிகம் மீண்டும் நேரடித் தமிழ்ப் படமொன்றில் கதாநாயகனாக நடிக்கிறார். ட்ரூ ஸ்டோரிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஷாம் சூர்யா இயக்குகிறார்.
நடிகர்கள் சத்யராஜ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்க படப்பிடிப்பு ஏற்காட்டில் தொடங்கியுள்ளது. ஆஷிக் அபு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார்.
Popular Malayalam actor Shane Nigam is acting in a new Tamil film.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


