ரஜினியுடன் மீண்டும் இணையும் ஜெயிலர் நடிகர்: 'தர்மன்' படத்தில் நமோ நாராயணா!
நடிகர் ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் நடிகர் நமோ நாராயணன்...

நடிகர்கள் ரஜினிகாந்த், நமோ நாராயணா
நடிகர் நமோ நாராயணா தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் - 2 திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நகைச்சுவை, ஆக்ஷன் என எல்லாம் கலந்த கமர்சியல் திரைப்படமாக அமைந்ததால் அனைத்து வயது ரசிகர்களும் ரசித்து வருகின்றனர்.
குறிப்பாக, முதல்பாதி முழுக்க நிறைய நகைச்சுவைக் காட்சிகள் கைகொடுத்ததற்கு நடிகர் நமோ நாராயணா பெரிய காரணமாக அமைந்தார். இதில், பழக்கடை மூர்த்தி என்கிற கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து ரசிகர்களைச் சிரிக்க வைத்தார். ஜெயிலர் - 2 திரைப்படம் ரூ. 750 கோடி வசூலித்ததற்கு இவரின் பங்கும் இருக்கிறது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் தர்மன் திரைப்படத்திலும் இவரைப் பயன்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த நமோ நாராயணா நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி ஈசன், போராளி, குட்டி புலி, கொம்பன், ரஜினி முருகன், நாடோடிகள் 2, ராயன் படங்களில் நடித்து கவனம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Reports indicate that actor Namo Narayana has joined the film Dharman
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


