
தர்மன் திரைப்படத்தில் நடனமாடிய ஸ்ரீலீலா?
நடிகை ஸ்ரீலீலா தர்மன் படத்தில் இருப்பதாகத் தகவல்...
ஸ்ரீலீலா
நடிகை ஸ்ரீலீலா தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில், நடிகர்கள் ராம் பொத்தினேனி, ராஷி கன்னா ஆகியோர் ரஜினியுடன் நடிப்பது போன்ற காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாடல் காட்சியும் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பாடல் காட்சியில் நடிகை ஸ்ரீலீலா சிறப்பு நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றாக நடனமாடக்கூடிய நடிகை என்பதால் இப்படத்தில் இணைந்திருக்கலாம் எனத் தெரிகிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவான பாடல் என்பதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
Reports indicate that actress Sreeleela has performed a special dance in the movie Dharman.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







