பட்டாசு விலை 25% உயர்வுகரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களுக்கு எனது அஞ்சலி: கனிமொழி பதிவு!ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளது: டிரம்ப்தமிழ்நாட்டில் இனி கூட்டணி ஆட்சிதான் நீடிக்கும்: திருமாவளவன்எல் நினோ! தமிழகத்தில் அடுத்த 3 வாரங்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகமாக இருக்கும்!மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,488 கன அடியாக குறைவு! தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: மதுரையில் முதல்வர் விஜய் நாளை தொடங்கி வைக்கிறார்!மே.இந்திய தீவுகள் - இந்திய ஒருநாள் தொடா்: இன்று தொடக்கம்ஆதாரங்களை அழிக்க ஜெம் வீரமணியிடம் ரூ. 24 லட்சம் பெற்றாா் சாந்தி! காவல் துறை பதில் மனு! ரூ. 55,900 கோடி அந்நிய முதலீட்டை ஈா்த்து தமிழகம் முதலிடம்!ஏ.ஐ. விவகாரங்களுக்குப் புதிய பேச்சுக் குழு! அமெரிக்கா, சீனா உடன்பாடு! எஸ்ஐஆா் விவகாரம்: இண்டி கூட்டணி செப். 30-இல் கூடுகிறது?

பொங்கல் வெளியீடாக ரஜினியின் தர்மன்?

தர்மன் திரைப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

Published On :

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்மன் திரைப்படத்தைப் பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளனர்.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 173-வது திரைப்படத்திற்குத் ’தர்மன்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, ஓ மை கடவுளே, டிராகன் திரைப்படங்களின் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

இப்படத்தின் மூன்றாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அதிரடியான மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தை 2027 பொங்கல் வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வர ராஜ்கமல் பிலிம்ஸ் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனின் சேயோன் திரைப்படத்தையும் ராஜ்கமல் நிறுவனமே தயாரிப்பதால் சேயோனை டிசம்பர் வெளியீடாகக் கொண்டு வருவார்கள் எனத் தெரிகிறது.

Plans are underway to release the film Dharman, starring Rajinikanth, during the Pongal festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.