இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

தர்மன் திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக ராம் பொதினேனி?

நடிகர் ராம் பொதினேனி தர்மன் திரைப்படத்தில் இணைந்ததாகத் தகவல்...

News image

நடிகர்கள் ரஜினிகாந்த், ராம் பொதினேனி

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:18 pm IST

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் தர்மன் திரைப்படத்தில் வில்லனாக நடிகர் ராம் பொதினேனி நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

நடிகர் கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர்கள் சிம்ரன், ராஷி கன்னா ஆகியோரும் இணைந்துள்ளனர். அனிருத் இசையமைக்க அன்பறிவ் சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக பணியாற்றி வருகின்றனர்.

அண்மையில், இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராம் பொதினேனி நடிப்பில் இறுதியாக வெளியான டபுள் ஐ ஸ்மார்ட், ஆந்திரா கிங் தாலுகா உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்விப்படமாகின. தற்போது, தன் அடுத்த திரைப்படத்தை ராம் பொதினேனியே இயக்கும் பணிகளில் உள்ளார்.

It is reported that actor Ram Pothineni will play the villain in the upcoming film Dharman, starring Rajinikanth.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.