விநாயகா் சதுா்த்தி: சென்னையில் 14 புதிய சோதனைச் சாவடிகள், கூடுதலாக 2,000 போலீஸாா் பாதுகாப்பு! தமிழகத்துக்கு கூடுதலாக 250 எம்பிபிஎஸ் இடங்கள்! தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி!இந்தியாவின் சோலாா் செல் இறக்குமதிக்கு 126% வரி! அமெரிக்கா அறிவிப்பு!பலமடங்கு கட்டண வசூல் புகாா்! 400 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.10.31 லட்சம் அபராதம்! இந்தியா - ஆப்கானிஸ்தான் இன்று மோதல்: தில்லியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்!

நடிகர் ரஜினியுடன் நடனமாடும் கயாடு லோஹர்?

நடிகை கயாடு லோஹர் தர்மன் திரைப்படத்தில் நடனமாடுவதாகத் தகவல்...

நடிகர்கள் ரஜினிகாந்த், கயாடு லோஹர்

Published On :

நடிகை கயாடு லோஹர் தர்மன் திரைப்படத்தில் சிறப்பு நடனமாட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 173 திரைப்படத்திற்குத் தர்மன் எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாகிவரும் இப்படத்தில் ரஜினி மருத்துவராக நடிக்கிறார். இது, படையப்பா மற்றும் வேட்டையாடு விளையாடு கலவையாக இருக்கும் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தெரிவித்திருந்தார்.

தற்போது, இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிரது. மேலும், இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நடிகை கயாடு லோஹர் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சிறப்பு நடனமாட உள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நடிகை ஷ்ரேயா சரண் தர்மன் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இது, சிறப்பு நடனத்திற்குதான் எனத் தகவல் பரவியது.

தற்போது, கயாடு லோஹரும் ரஜினியுடன் இணைய உள்ள தகவல் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் விமானத்தில் ரஜினியின் அருகே அமர்ந்து பயணித்த கயாடு, ‘விரைவில் நான் ரஜினி சாருடன் இணைந்து நடிப்பேன் என நம்புகிறேன்’ எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

actress Kayadu Lohar will perform a special dance number in the movie Dharman.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.