திகில் நிறைந்த 418 திரைப்படம்: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
418 திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

418 திரைப்படத்தின் போஸ்டர் - படம்: விடியோ கிளிப்
அண்மையில் வெளியான 418 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எஃப் படத்தின் இணை இயக்குநராகப் பணியாற்றிய கீர்த்தன் நடகெளடா 418 படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரசாந்த் நீல் வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தில், சைத்ரா ஜே. ஆச்சார், சூர்யா ராஜ் வீரபதினி, சரண் லக்கராஜூ, பிரீத்தி பகடாலா மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் 418-ஆம் அறைக்குள் உலவும் தேவிகா என்ற ஆவியிடம் சிக்கிய மாணவர்கள், தப்பித்தார்களா என்பதே 418 படத்தின் கதை.
வெங்கி இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு தினேஷ் திவாகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தெலுங்கில் எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், 418 திரைப்படம் நவ. 20 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The OTT release date for the recently released film '418' has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


