பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கோலிவுட்டின் முகங்கள்!

தமிழ் சினிமா இயக்குநர்கள் குழு குறித்து...

இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன், லிங்குசாமி

Updated On :

இயக்குநர் லிங்குசாமியின் பிறந்த நாளை முன்னணி இயக்குநர்கள் கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், கௌதம் மேனன், லிங்குசாமி, வசந்த பாலன் ஆகியோர் நல்ல நட்புறவில் உள்ளனர். அடிக்கடி தனிப்பட்ட முறையில் இவர்கள் சந்தித்துக்கொள்வது; பிறந்த நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது என ஆரோக்கியமான இயக்குநர்கள் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.

மேலும், அவரவர் திரைப்படங்களின் கதை மற்றும் திரைக்கதையிலும் பிறரது ஆலோசனைகளைத் மதிப்பர் என்றும் தெரிகிறது. தங்கள் குழுவிலுள்ள இயக்குநர்களின் திரைப்படங்கள் வெற்றி பெற்றால் சேர்ந்தே அதனைக் கொண்டாடவும் செய்கின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் லிங்குசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர், கௌதம் மேனன், கார்த்திக் சுப்புராஜ், நெல்சன் ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து பதிவிட்ட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், “இந்தப் பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றும் அழகான தருணங்கள்... மீண்டும் நம் அனைவரையும் ஒரு பிறந்தநாள் ஒன்றிணைத்திருக்கிறது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Leading directors have celebrated director Lingusamy's birthday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.