நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா தங்க நகைகளில் கலப்படம்! கண்டுபிடிக்க முடியாத ரேனியம் உலோகம்! ஹால்மார்க் முத்திரையும் வீணா? கண்டுபிடிப்பது எப்படி?செனா நாடுகளில் சதம் அடித்த இந்தியராக கே.எல். ராகுல் வரலாற்றுச் சாதனை

இந்த ஆண்டை மிகச் சிறப்பாக மாற்றியதற்கு நன்றி: சீன் வெற்றிக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

சீன் திரைப்படத்தின் வெற்றி தொடர்பாக நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

சூர்யா

Updated On :

சீன் திரைப்படத்தின் வெற்றி தொடர்பாக நடிகர் சூர்யா விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

கருப்பு மற்றும் விஸ்வநாத் ஆண்ட் சன்ஸ் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சூர்யா நடித்த சீன் திரைப்படமும் வெற்றி பெற்றதால் ஹாட்ரிக் வெற்றியை சூர்யாவும் அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.

சீன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தபோதும் நகைச்சுவை மற்றும் வித்தியாசமான கதைப் பின்னணியால் இப்படம் உலக அளவில் ரூ. 260 கோடிக்கும் மேலாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது.

இந்த நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அன்பான ஃபேன்ஸ், தம்பி - தங்கைகள், தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் எனது மரியாதையும் நன்றிகளும். சீன் படத்தைத் திரையரங்குகளுக்கு வந்து பார்த்து, கொண்டாடி, அலசி ஆராய்ந்து, டீகோட் செய்து பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறீர்கள்.

ஒரு படம் ஓடினால் அதில் நடித்தவர்கள், படம் எடுத்தவர்கள், படத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் சந்தோஷப்படுவார்கள். ஆனால், எங்களைவிட நீங்கள் அதிகம் சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள் இந்த வெற்றிக்காக. இதற்கு எப்படி வார்த்தைகளில் நன்றி சொல்ல முடியும் எனத் தெரியவில்லை. எனது மனமார்ந்த நன்றிகளும், மரியாதைகளும் படக்குழு சார்பாக.

இந்த ஆண்டை மிகவும் சிறப்பானதாக மாற்றியதற்கு நன்றி. சீன் படத்தைக் கொண்டாடுவதற்கு நன்றி. திரையரங்க உரிமையாளர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்கள், சமூக ஊடக இன்ஃப்ளுயன்சர்கள், நலம் விரும்பிகள், உலகம் முழுவதுமுள்ள ரசிகர்கள் ஆகியோருக்கு எனது மரியாதைகளும் நன்றிகளும். அடுத்து மேலும் சிறப்பான படத்துடன் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Summary

Actor Suriya released a video expressing gratitude for the success of the movie Scene.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.